×

3.7 டன் குழல் அப்பளம் பறிமுதல்

 

சேலம், ஜூலை 27: சேலத்தில் 2 நிறுவனங்களில் நடத்திய சோதனையில் செயற்கை வண்ணங்களை சேர்த்து தயாரித்த 3.7 டன் குழல் அப்பளம் பறிமுதல் செய்யப்பட்டது. அந்த நிறுவனங்களுக்கு நோட்டீஸ்அளிக்கப்பட்டது. சேலம் சிவதாபுரம், சூரமங்கலம் பகுதியில் அளவுக்கு அதிகமாக செயற்கை நிறமூட்டிகள் கொண்டு குழல் அப்பளங்கள் தயாரிக்கப்படுவதாக மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவனுக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் கதிரவன் தலைமையில் உணவு பாதுகாப்புஅலுவலர் சிவலிங்கம் சிவதாபுரம் பகுதியில் 4 அப்பள தயாரிப்பு கம்பெனியில் சோதனை நடத்தினர்.இதில் 2 கம்பெனிகளில் செயற்கை நிறமூட்டிகள் அதிகமாக கலந்து குழல் அப்பளங்கள் தயாரித்தது கண்டுபிடிக்கப்பட்டது. 2 கம்பெனிகளில் இருந்த 3.7டன் குழல் அப்பளங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இதன் மதிப்பு ரூ.2 லட்சமாகும். அந்த நிறுவனங்களில் இருந்து மாதிரிகள் பரிவோதனைகள் எடுக்கப்பட்டு சென்னை கிண்டியில் உள்ள பகுப்பாய்வு மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டது.

அந்த 2 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. ஆய்வு அறிக்கை வந்த பின்னர் 2 கம்பெனிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், இதுபோன்ற சோதனைகள் தொடரும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.இதுபற்றி மாவட்ட நியமன அலுவலர் கதிரவன் கூறுகையில், குழல் அப்பளங்களில் செயற்கை நிறமூட்டிகள் அதிகம் சேர்க்கக்கூடாது. பலமுறை எச்சரிக்கை விடுத்தும் அதனை பின்பற்றாமல் குழல் அப்பள தயாரிப்பாளர்கள், செயற்கை நிறமூட்டிகளை அளவுக்கு அதிகமாக பயன்படுத்துவது கண்டறியப்பட்டுள்ளது. இதுபோன்று அதிக அளவில் செயற்கை நிறமூட்டிகள் கொண்டு அப்பளம் தயாரித்தாலோ அல்லது விற்பனை செய்தாேலோ அவை பறிமுதல் செய்யப்படும். மேலும் அவர்கள் மீது உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும், என்றார்.

The post 3.7 டன் குழல் அப்பளம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Salem ,
× RELATED சேலம் மாவட்ட பாஜ தலைவர் மீது பெண்...